பெட்டிக்கடைக்காரருக்கு கத்திக்குத்து


பெட்டிக்கடைக்காரருக்கு கத்திக்குத்து
x

நாகூர் அருகே மேலவாஞ்சூரில் பெட்டிக்கடைக்காரரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்

நாகூர்;

நாகூர் அருகே உள்ள மேலவாஞ்சூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மீரான்(வயது48). இவர் மேலவாஞ்சூர் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கரை பாளையத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (38) என்பவர் கடைக்கு வந்து மீரானிடம் காசு கொடுக்காமல் பீடி கேட்டார். அப்போது மீரான் காசு இல்லாமல் பீடி கொடுக்க முடியாது என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணி ராஜ் தான் இடுப்பில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து மீரான் வயிற்றில் குத்தினார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்தோணிராஜை பிடித்து நாகூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story