ஆக்கிரமிப்புகளை அகற்ற கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு


ஆக்கிரமிப்புகளை அகற்ற கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு
x

காரியாபட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு

காரியாபட்டி பேரூராட்சி, நகர் பகுதிக்குள் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து காரியாபட்டி-மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையின் இருபுறமும் கடைகாரர்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேஸ்குமார் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் காரியாபட்டி பகுதிகளில் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்பை அகற்றினர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

ெதாடர்ந்து அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனைத்து கடைக்காரர்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்காமல் திடீர் என அகற்றப்பட்டதால் கடைக்காரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து அனைத்து கடைகளின் முன்புறம் போடப்பட்டுள்ள செட்டுகள் உள்பட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story