புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு `சீல்'
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு `சீல்' வைக்கப்பட்டது.
சிவகங்கை
தேவகோட்டை,
தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் பிரகதீஸ்வரன் (வயது 26). சில நாட்களுக்கு முன்பு இவர் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது,
மீண்டும் அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் வந்ததை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன், தேவகோட்டை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கடையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு பறிமுதல் செய்தனர்.
மேலும், கடையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story