பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் விற்ற கடைக்கு 'சீல்'
பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
நீலகிரி
பந்தலூர்,
நீலகிரி மாவட்டத்தில் 1, 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி, பந்தலூர் பஜாரில் உள்ள கடைகளில் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் லட்சுமி சங்கர், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் மற்றும் அலுவலர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். அப்போது மளிகை கடையில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடையை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story