தூத்துக்குடி மாவட்ட கடைகளில் வியாபாரிகள் ஜாதி அடையாள பொருட்களை விற்க வேண்டாம்
தூத்துக்குடி மாவட்ட கடைகளில் வியாபாரிகள் ஜாதி அடையாள பொருட்களை விற்க வேண்டாம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவட்ட செய்திகள்
திருச்செந்தூர்:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள பெட்டிக்கடை, பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடை வியாபாரிகள் ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் கயிறு, ஸ்டிக்கர்ஸ் மற்றும் டீ-சர்ட் போன்ற பொருட்களை விற்க வேண்டாம். இந்த தகவலை மாவட்டம் முழுவதும் உள்ள பேரமைப்பின் இணைப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைத்து வியாபாரிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
சமூக அக்கறையின் அடிப்படையில் அனைத்து வியாபாரிகளும் இந்த வேண்டுகோளின் முக்கியத்துவம் மற்றும் தீவிரம் உணர்ந்து போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேரமைப்பு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story