200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூரில், 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
கோட்டூர்;
கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூரில், 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
கடைகள் அடைப்பு
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோடூர் வர்த்தகா் சங்கத்தினர் நேற்று காலை முதல் மாலை வரை கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கோட்டூரில் அரசு மதுக்கடை இல்லாததால் கள்ளச்சந்தையில் வீதிகளில் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே கோட்டூரில் அரசு மதுபானக்கடை திறக்க வேண்டும்.மின்கட்டண உயர்வு, பெட்ரோல்- டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோட்டூரில் திருவாரூர் ரோடு, மன்னார்குடி ரோடு, திருத்துறைப்பூண்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
பொதுமக்கள் ஏமாற்றம்
இதனால் காலை நேரத்தில் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோட்டூர் கடைவீதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் பால் கடை, மருந்து, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.