கடைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்


கடைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்
x

கடைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் குப்பைகளை பிரித்தல், அவற்றை முறையாக அகற்றுதல் தொடர்பாக உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள கடைகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மை பணியை மேற்கொண்டார். மேலும் கடைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

நகரமன்ற துணைத் தலைவர் சபியுல்லா, நகர மன்ற உறுப்பினர்கள் குட்டி, கவுரி அய்யப்பன், ஷபினாரசாக், அசோகன், ராஜேந்திரன், லட்சுமி வாசுதேவன், வினோதினி, நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story