ஊட்டியில் குறும்பட விழா
ஊட்டியில் குறும்பட விழா தொடங்கியது.
நீலகிரி
ஊட்டி,
ஊட்டி அசெம்பிளி தியேட்டரில் குறும்பட விழா நேற்று தொடங்கியது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் போதை பழக்கத்தில் இருந்து மாணவர் விடுபடும் கதை கொண்ட குறும்படத்தை அமைச்சரும், கலெக்டரும் பார்த்தனர். குறும்பட விழா 3 நாட்கள் நடக்கிறது. தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு குறும்படம் ஒரு வாய்ப்பாகும். குறிப்பாக ஊட்டியில் குறும்பட தயாரிப்பாளர்கள் மூலம் படுகர் இன மொழியில் குறும்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. விழாவில் அசெம்பிளி ரூம்ஸ் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story