சுருக்குமடி வலையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்

சுருக்குமடி வலையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்
x

சுருக்குமடி வலையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என நாகையில் நடந்த 4 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகப்பட்டினம்

சுருக்குமடி வலையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என நாகையில் நடந்த 4 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவசர ஆலோசனை கூட்டம்

நாகை அக்கரைப்பேட்டையில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர் மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் 4 மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர் கிராம பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

சுருக்குமடி வலை

அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். சுருக்குமடி வலையை தடை செய்யக்கோரி 4 மாவட்ட தலைமை மீனவர் கிராமங்கள் சார்பில், அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் மனு கொடுப்பது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள், மீன்வளத்துறை அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோரிடம் வழங்கி சுருக்குமடி வலையை தடை செய்ய வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story