குறுவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும்- விவசாயிகள்


குறுவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும்- விவசாயிகள்
x
தினத்தந்தி 21 July 2023 1:00 AM IST (Updated: 21 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

குறுவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்

குறுவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் மதியழகன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் போதுமானதாக இல்லாததால் குறுவை சாகுபடி பயிர்கள் கருகி வருகின்றன. எனவே உடனடியாக குறுவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்

வேதாரண்யம் பகுதியில் மாணங்கொண்டான் ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் மதியழகன் தெரிவித்தார்.

கூட்டத்தில் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் முருகு மற்றும் வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தோட்டக்கலைத்துறை, விவசாயத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story