கோவிலுக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு சிறப்பு மரியாதை அளிக்க வேண்டுமா?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி


கோவிலுக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு சிறப்பு மரியாதை அளிக்க வேண்டுமா?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x

கோவிலுக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு சிறப்பு மரியாதை அளிக்க வேண்டுமா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது

மதுரை


சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தை சேர்ந்த சின்னன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த கண்டனூர் கிராமத்தில் செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தனி நபருக்கு எந்த விதமான சிறப்பு மரியாதையும் கோவில் சார்பில் வழங்கக்கூடாது என்பதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோவில் நிர்வாக நடைமுறையில் இந்த கோர்ட்டு தலையிட விரும்பவில்லை. இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில், பொது நலன் கருதி ஒரு விஷயத்தை தெளிவு படுத்த வேண்டும். அதாவது, ஒரு நபர் கோவிலுக்கு தனது பங்களிப்பாக, நன்கொடை வழங்கியிருந்தால் அவர்களுக்கு, கோவில் சார்பில் சிறப்பு மரியாதை வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வி எழுகிறது என்றார்.

பின்னர் இது குறித்து சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, இந்த விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Related Tags :
Next Story