தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது
தூத்துக்குடியில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சகாயமாதா பட்டினம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி புது முனியசாமிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் சக்திகுமார், முத்துராஜ் மகன் அந்தோணி சூர்யா என்ற சூர்யா (வயது 20), தூத்துக்குடி சோட்டையன்தோப்பு ஜோதிபாசு நகரை சேர்ந்த ஆறுமுக நயினார் மகன் குணசேகரன் (22), சுந்தரவேல்புரத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் வேல்முருகன் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் அந்த வழியாக சென்ற தொழிலாளி ஒருவரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார்களாம். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சக்திகுமார், அந்தோணி சூர்யா என்ற சூர்யா, குணசேகரன் மற்றும் வேல்முருகன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.