திருவட்டார் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
திருவட்டார் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவட்டார் அருகே உள்ள உம்மன்கோடு புனத்து விளையை சேர்ந்தவர் செல்லம் (வயது 54), மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடையை அடித்து நொறுக்கியதாக போலீசில் கொடுத்த புகாரின் பேரில் உம்மன்கோடு சிவ மணிகண்டன் குமார் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் செல்லத்துக்கும், சிவமணிகண்டன் குமாருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் உம்மன்கோடு பகுதியில் சென்ற செல்லத்தை வழிமறித்த சிவமணிகண்டன் குமார், புகார் சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடத்துவதற்கு ரூ.10 ஆயிரம் கேட்டு, கத்தியை காட்டி மிரட்டி, அவர் சட்டைப்பையில் இருந்த ரூ.500-ஐ எடுத்து கொண்டு தப்பி சென்றார்.
இது தொடர்பாக செல்லன் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, சிவமணிகண்டன் குமாரை கைது செய்தனர்.