வாடிப்பட்டி அருகே தொழில் அதிபரிடம் கத்தியை காட்டிவழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது
வாடிப்பட்டி அருகே தொழில் அதிபரிடம் வழிப்பறி செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே தொழில் அதிபரிடம் வழிப்பறி செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
காரை மறித்து வழிப்பறி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மகாராணி நகர் 4-வது தெருவில் குடியிருந்து வருபவர் ராமநாதன் (வயது 53). இவர் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையில் தென்னை நார் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 1.30 மணிக்கு தனது காரில் கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அந்த காரை வழிமறித்தனர்.
அதில் 2 நபர்கள் காருக்குள் சென்று கத்தியை காட்டி மிரட்டி ராமநாதனிடமிருந்து 1 பவுன் தங்கமோதிரம், ரொக்கபணம் ரூ.900 ஆகியவற்றை பறித்தனர். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணை
மேலும் நேற்று மாலை 5 மணிக்கு கால்நடை ஆஸ்பத்திரி முன்பு வாகன சோதனை செய்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பொன்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பரட்டை ஆறுமுகம் (35), ராமநாயக்கன்பட்டி செல்லையா(28), பேட்டைபுதூர் கோபிநாத்ராஜா (35) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது தொழில் அதிபர் ராமநாதனிடம் அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்து 1 பவுன் தங்க மோதிரம், ரூ.900 மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.