தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 எந்திரங்களில் மின் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக 3 எந்திரங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 எந்திரங்கள் உள்ளன. இதன்மூலம் தினமும் 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே நிலக்கரி பற்றாக்குறை காரணமாக இந்த அனல் மின் நிலையத்தில் முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) அனல் மின் நிலையத்தில் ஒன்று மற்றும் 5-வது எந்திரங்களில் மட்டுமே மின் உற்பத்தி நடந்து வருகிறது. 2-வது, 3-வது மற்றும் 4-வது எந்திரங்கள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story