புதர்களுக்குள் சிக்கிய மதகு சீரமைக்கப்படுமா?


புதர்களுக்குள் சிக்கிய மதகு சீரமைக்கப்படுமா?
x

கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் புதா்களுக்குள் சிக்கிய மதகு சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் புதா்களுக்குள் சிக்கிய மதகு சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா்.

தரைப்பாலம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் புனவாசல் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்கால் கூத்தாநல்லூர்- வடபாதிமங்கலம் சாலையில் குறுக்கே செல்வதால், சாலையின் மேல்பகுதியில் தரைப்பாலம் கட்டப்பட்டு, அதையொட்டி வயல்களுக்கு தேவையான தண்ணீரை, வெண்ணாற்றில் இருந்து பாசன வாய்க்கால் மூலம் கொண்டு சென்று புனவாசல், எள்ளுக்கொல்லை தெரு, வடபாதிமங்கலம் மற்றும் அப்பகுதி விவசாயிகள் நெல், உளுந்து பயறு, பருத்தி போன்ற சாகுபடிகளை செய்து வருகின்றனர்.

திருகு பலகை

மேலும், பாசன வாய்க்கால் மதகில் பொருத்தப்பட்ட திருகு பலகையின் மூலம் தேவையான தண்ணீரை திறப்பதற்கும், தண்ணீர் தேவையற்ற நேரங்களில் திருகு பலகையினை மூடுவதற்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டது.இந்த நிலையில், மதகில் பொருத்தப்பட்ட திருகு பலகை சேதமடைந்து சரியான முறையில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், சேதமடைந்த பாசன வாய்க்கால் மூலம் சரியான அளவில் தண்ணீர் கொண்டு செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது.

சீரமைக்க கோரிக்கை

இதனால், சாகுபடி நேரங்களில் சரியான அளவில் வயல்களுக்கு முறையான அளவில் தண்ணீர் செல்வதில் குறைபாடு உள்ளது. சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு உள்ள இடத்தில் அடர்ந்த புதர்கள் சூழ்ந்து மதகு இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது.இந்த புதர்களாலும் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. இதனால், சரியான அளவில் தண்ணீர் பாசன வாய்க்கால் மூலம் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு மற்றும் புதர்களை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story