கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி


கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
x

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்திற்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது.கால்நடைகளை கோமாரி நோய் தாக்குகின்றது. கோமாரி நோய் தாக்கிய மாடுகளுக்கு வாய், மூக்கு துவாரம், நாக்கு, குளம்புகளில் புண்கள் ஏற்படும். நோய் பாதித்த கால்நடைகளுக்கு காய்ச்சல் அதிகரித்து வாயில் இருந்து எச்சில் வடிந்து கொண்டே இருக்கும். குளம்புகளில் ஏற்பட்ட புண்ணில் புழுக்கள் உருவாகி நடக்க முடியாமல் சிரமப்படும். இதை சரியான நேரத்தில் கவனித்து நோய்த்தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் சில தினங்களில் கால்நடைகள் இறந்து போகும் இந்த நிலையில் வருடம் தோறும் செப்டம்பர் மாதங்களில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த நிலையில் செப்டம்பர் முடிந்து அக்டோபர் மாதம் ஆகியும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மழைக்காலம் தொடங்கி விட்டதால் கால்நடைகளை நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக முகாம் அமைத்து கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, முன்பு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கோமாரி நோய் தடுப்பூசி கடந்த 2 வருடங்களாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு கோமாரி நோய் தடுப்பூசி அனுப்பப்படவில்லை விரைவில் அனுப்பப்படும் என தெரிகிறது. தடுப்பூசி வந்தவுடன் உடனடியாக கால்நடைகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story