பணத்தகராறில் ெதாழிலாளிக்கு அரிவாள் வெட்டு


பணத்தகராறில் ெதாழிலாளிக்கு அரிவாள் வெட்டு
x

கோட்டூர் அருகே பணத்தகராறில் ெதாழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

கோட்டூர்;

கோட்டூர் அருகே ஒரத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது35). இவருடைய அண்ணன் காளிதாஸ் அதே ஊரை சேர்ந்த பழனித்துரைக்கு ரூ. 50ஆயிரம் கடன் கொடுத்தார். காளிதாஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்தார். இதனால் காளிதாஸ் தம்பி சந்திரசேகர் தனது அண்ணன் கொடுத்த கடனை பழனித்துரையிடம் கேட்டாா். இதனால் அவர்கள் இருவர் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.சம்பவத்தன்று காலை பழனித்துரை கடைத்தெருவுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு சந்திரசேகர் வீட்டு வழியாக வந்தார். அப்போது சந்திரசேகர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து பழனித்துரையின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த பழனித்துரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இது குறித்த புகாரின் பேரில் திருக்களார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story