சித்தா பெண் டாக்டர் தற்கொலை
ஆலங்குளம் அருகே, அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வீட்டில் தூக்குப்போட்டு சித்தா பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே, அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வீட்டில் தூக்குப்போட்டு சித்தா பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
சித்தா பெண் டாக்டர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு பூலாங்குளத்தை சேர்ந்தவர் மோசஸ் சுந்தர் சிங். இவருடைய மகள் லில்லி ரோஸி (வயது 26).
பி.எஸ்.எம்.எஸ். என்ற சித்த மருத்துவ படிப்பை முடித்துள்ளார். சித்தா டாக்டரான இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். சில ஆண்டுகளாகவே இவ்வாறு முயற்சி செய்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அரசு வேலை கிடைக்கவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். லில்லி ரோஸி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு வேலை கிடைக்காத விரக்தியில் சித்தா பெண் டாக்டர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.