சித்த மருத்துவ முகாம்
கூடலூர் அருகே அரசு பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான சித்த மருத்துவ முகாம் நடந்தது.
தேனி
கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான சித்த மருத்துவ முகாம் நடந்தது. இதில் காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவமனை சித்த மருத்துவர் சிராஜூதீன் தலைமையில் கிராம சுகாதார செவிலியர் கமலவள்ளி மற்றும் மருத்துவ குழுவினர் பள்ளி மாணவிகளுக்கு கருவேப்பிலை சூரணம், கரிசாலை சூரணம், நெல்லிக்காய் லேகியம், மாதுளை மணப்பாகு அடங்கிய சித்த மருத்துவ பெட்டகத்தை வழங்கினர். இந்த மருந்துகளை சாப்பிட்டால், வளர் இளம்பெண்களுக்கு ஏற்படக்கூடிய ரத்தசோகை, மாதவிடாய் பிரச்சினை, தலைமுடி உதிர்தல், உடல் வலுவின்மை, இளநரை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவற்றை நிவர்த்தி செய்யலாம் என்று மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். முகாமில் தலைமை ஆசிரியர் இளங்கோவன், மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story