தியாகதுருகம்நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவிலில் சித்தர் குருபூஜை


தியாகதுருகம்நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவிலில் சித்தர் குருபூஜை
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம்நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவிலில் சித்தர் குருபூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டுதோறும் மாசி மாதம் சித்தர் ஜீவ சமாதி அடைந்ததை நினைவு கூறும் வகையில் குருபூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான குருபூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் சித்தர் சிலைக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கோவில் வளாகத்தில் சிவனடியார் தங்கதுரை தலைமையில் 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சித்தர் தியான வடிவத்தில் மலர், சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story