சித்தி விநாயகர் கோவில் தேர் வெள்ளோட்டம்


சித்தி விநாயகர் கோவில் தேர் வெள்ளோட்டம்
x

சித்தி விநாயகர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே நெம்மகோட்டை கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதையடுத்து அந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் நிலையை வந்தடைந்தது.


Next Story