சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு


சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

நாகப்பட்டினம்

வாய்மேடு:


வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தி வடக்கு குத்தகை பகுதியில் அமைந்துள்ளது சித்தி விநாயகர் கோவில். இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி கடந்த 7-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை உள்ளிட்ட பூஜையுடன் தொடங்கி, 8-ந் தேதி முதல் கால யாகசாலையும், நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜையுடன் தொடங்கி, பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கடங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்தது. பின்னர் கோவிலின் மேல் உள்ள கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story