சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு


சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு
x

திருமருகல் அருகே சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கிடாமங்கலம் கிராமத்தில் சித்தி விநாயகர், செந்தூர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், முதல் காலயாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை கடம் புறப்பாடாகி கோவில் விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் சித்திவிநாயகர், செந்தூர் பாலமுருகனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Next Story