தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா கீழ அரும்பூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருவாடானை தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு பணியில் இருந்த மண்டல துணை தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கீழ அரும்பூர் கிராம பொதுமக்கள் ஒன்று கூடி நஞ்சை நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிருக்கு போதிய மழை இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் கண்மாய் தண்ணீரை விவசாயிகள் அனைவரும் பகிர்ந்து பாய்ச்சி கொள்வது என முடிவு செய்துள்ளோம். ஆனால் இந்த முடிவை ஒரு சிலர் ஏற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக மோட்டார் என்ஜினை வைத்து அவர்களது நிலத்திற்கு தண்ணீரை பாய்ச்சினர்.

இது குறித்து கிராம மக்கள் வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தோம்.

ஆனால் அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் தண்ணீர் பாய்ச்சியுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட துணை தாசில்தார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story