பெட்ரோல் விற்பனை நிலையம் முற்றுகை
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது ஒரு பஸ்சுக்கு 16 பங்குதாரர்கள் என ஒப்பந்தம் போட்டு ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.3 ஆயிரம் என்ற அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் முதலீடாக பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
பணத்தை திரும்ப கேட்டனர்
இந்த நிலையில் ராஹத் டிரான்ஸ்போர்ட் உரிமையாளரான கமாலுதீன் கடந்த ஆண்டு திடீரென உயிரிழந்தார். இதையடுத்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கமாலுதீன் மனைவியிடம் முதலீட்டு தொகையை திரும்ப கேட்டுள்ளனர்.அதற்கு தங்ளுக்கு சரியான பதிலை தெரிவிக்கவில்லை என்று கூறி பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் கமாலுதீன் மனைவி உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெட்ரோல் விற்பனை நிலையம் முற்றுகை
இந்த நிலையில் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தை, கமாலுதீன் குடும்பத்தினருக்கு சொந்தமானது எனக்கூறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், தங்களது முதலீடு கிடைக்கும் வரை போராடுவோம். இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்றனர்.