அடிப்படை வசதி கேட்டு சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை


அடிப்படை வசதி கேட்டு சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

திட்டக்குடி அருகே உள்ள சிறுமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் 77 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் மற்றும் அடிப்படை வசதி கேட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள், திடீரென சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையறிந்த சப்-கலெக்டர் பழனி, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story