களக்காட்டில் முற்றுகை போராட்டம்


களக்காட்டில் முற்றுகை போராட்டம்
x

களக்காட்டில் முற்றுகை போராட்டம் நடந்தது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு சார் பதிவாளர் அலுவலகம் முன்பு புரட்சி பாரதம் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார். ஐக்கிய முஸ்ஸிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சித்திக், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட தலைவர் முகமது காஸிர், களக்காடு ஒன்றிய தலைவர் சுகிதன்ராஜ், களக்காடு நகரச் செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story