மின்தடையால் தானியங்கி சிக்னல் செயல்பாடு பாதிப்பு


மின்தடையால் தானியங்கி சிக்னல் செயல்பாடு பாதிப்பு
x
திருப்பூர்


திருப்பூர் மாநகரில் குமரன் சாலை, பல்லடம் சாலை, புஷ்பா ரவுண்டானா, எஸ்.ஏ.பி. சிக்னல் உள்பட பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கும். இந்த சாலைகளில் தானியங்கி சிக்னல் மூலம் போக்குவரத்து சீர்செய்யப்படுகிறது. சிக்னல் இயங்கும்போதும் போக்குவரத்தை முறைப்படுத்துவது என்பது சவாலாகவே உள்ளது.

ஆனால் மாநகரில் மின்பாதை பராமரிப்பு பணிகளுக்காக செய்யப்படும் மின்தடையால் சிக்னல் இயங்காமல் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர்செய்கின்றனர். அவர்கள் நாள் முழுவதும் வெயிலில் நின்று உடல்சோர்வுடன் போக்குவரத்தை சீர்செய்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் குழப்பத்துடன் செல்வதால் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று மாநகாில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.

தனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினார்கள். சோலார் ேபனல்கள் அமைத்து சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து சிக்னலை இயக்கலாம். எத்தனையோ பயனில்லாத திட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக இத்தகைய திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


Next Story