இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
உடுமலை,
உடுமலை கொழுமம் சாலையில் கண்ணமநாயக்கனூர் பிரிவில் இருந்து பிரிந்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செல்லும் வழித்தடத்தில் மருள்பட்டி, சாளரப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து தினசரி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உடுமலைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் ஒரேஒரு பஸ்தான் உள்ளது. அதனால் காலை, மாலை நேரங்களில் மருள்பட்டி, சாளரப்பட்டி, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று உடுமலை ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எப்.ஐ) சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடந்தது.
இதில் பெறப்பட்ட கையெழுத்துகளுடன் கோரிக்கை மனுதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் உடுமலை கிளை அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.இந்த மனுவை டி.ஒய்.எப்.ஐ.உடுமலை ஒன்றிய தலைவர் ஆ.ராமசாமி, முன்னாள் செயலாளர் கி.கனகராஜ், கமிட்டி உறுப்பினர் மாசாணி, மருள்பட்டி பழனிசாமி ஆகியோர்கொடுத்தனர்.