போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டவாலிபரை வழிமறித்து தாக்குதல்


போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டவாலிபரை வழிமறித்து தாக்குதல்
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த வாலிபரை வழிமறித்து தாக்குதல் நடத்திய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனி அருகே உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த பாண்டி மகன் குணால் (வயது 25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கலையரசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கலையரசன் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற குணால் தேனி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். நேற்று முன்தினம் கையெழுத்து போட்டுவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டு இருந்தார். பழனிசெட்டிபட்டியில் அவரை, கலையரசன் உள்பட சிலர் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் கலையரசன் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story