பட்டு விவசாயிகளை ஒரே இடத்துக்கு வரவழைத்து நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டு விவசாயிகளை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வரவழைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கியதற்கு தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெண்பட்டு உற்பத்தி
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை உள்ளிட்ட பல பகுதிகளில் வெண் பட்டு உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலையால் விவசாயம் என்பது சவாலான விஷயமாக மாறிவரும் சூழலில் வெண்பட்டு உற்பத்தி விவசாயிகளுக்கு கைகொடுத்து வருகிறது. குறுகிய காலத்தில் குறைந்த பணியாளர்களைக் கொண்டு வருவாய் ஈட்ட முடியும் என்பதால் புதிய விவசாயிகள் பலரும் பட்டு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்தநிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டு வருவதாக பல சந்தர்ப்பங்களில் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.அந்தவகையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 500 க்கும் மேற்பட்ட விவபட்டு விவசாயிகளை ஒரே இடத்துக்கு வரவழைத்து நலத்திட்ட உதவிகள்சாயிகளை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிக்கு வரவழைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளனர்.
அலைக்கழிப்பு
இதுகுறித்து தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்களில் விவசாயிகளின் தேவை அறிந்து தற்போதைய சூழலுக்கு தகுந்தபடி மானியம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. இந்த நிலையில் விவசாயிகளை அலைக்கழிக்கும் செயலில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் பல நூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்து விழாவுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்புடன் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. தற்போது பட்டு வளர்ப்புத்தொழிலுக்கு கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில் பெரும்பாலும் விவசாயிகளே தழை அறுவடை, வலை வைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் நீண்ட தூரப்பயணத்தால் 2 நாட்களாக பணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு குறைபாடு, உயர் அதிகாரிகளின் திட்டங்களில் குறைபாடுகள் உள்ளிட்ட நிர்வாகக் குளறுபடிகள் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் பட்டு வளர்ப்புத் தொழில் பின்தங்கும் நிலை ஏற்படும். எனவே விவசாயிகளை நீண்ட தூரம் அலைய வைத்த அதிகாரிகளைக் கண்டிப்பதுடன் இனிவரும் காலங்களில் மண்டல வாரியாக நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.