ரூ.20¼ லட்சத்து பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.20¼ லட்சத்து பட்டுக்கூடுகள் விற்பனையானது.
தர்மபுரி
தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 3,007 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ரூ.772-க்கும், குறைந்தபட்சமாக ரூ.485-க்கும், சராசரியாக ரூ.675.08-க்கும் பட்டுக்கூடுகள் விற்பனையானது. மொத்தம் ரூ.20 லட்சத்து 30 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது.
Related Tags :
Next Story