சேத்தியாத்தோப்பு அருகே மாணவியிடம் சில்மிஷம்; வாலிபர் கைது


சேத்தியாத்தோப்பு அருகே மாணவியிடம் சில்மிஷம்; வாலிபர் கைது
x

சேத்தியாத்தோப்பு அருகே மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்தபோது அங்கு அதே பகுதியை சேர்ந்த இளவரசன் மகன் ரத்தினவேல்(வயது 30) என்பவர் வந்து குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். மாணவி தண்ணீர் எடுக்க சென்றபோது, ரத்தினவேல் பின்னால் சென்று, அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story