குமரி மாவட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் வெள்ளிப்பதக்கம்


குமரி மாவட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் வெள்ளிப்பதக்கம்
x

காசநோய் ஒழிப்பில் சாதனை படைத்த குமரி மாவட்டத்துக்கு மத்திய அரசு வெள்ளிப் பதக்கம் வழங்கியது. இதையொட்டி குமரி மாவட்ட துணை இயக்குனர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

காசநோய் ஒழிப்பில் சாதனை படைத்த குமரி மாவட்டத்துக்கு மத்திய அரசு வெள்ளிப் பதக்கம் வழங்கியது. இதையொட்டி குமரி மாவட்ட துணை இயக்குனர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

வெள்ளிப்பதக்கம்

தமிழக அரசு 2025-க்குள் காசநோயை தமிழ்நாட்டில் இருந்து ஒழித்து, காசநோய் இல்லாத மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின்படி அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவபணியாளர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் காசநோய் தொற்று கடந்த 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதத்திற்கு மேல் குறைக்கப்பட்டுள்ளது.காசநோயை ஒழிக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டி மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு உலக காசநோய் தினத்தையொட்டி விருதுகள் வழங்கியது.

முதல்-அமைச்சரிடம் வாழ்த்து

வாரணாசியில் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்துக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கி கவுரவித்தது.

இதையடுத்து பதக்கம் பெற்ற மாவட்டங்களின் துணை இயக்குனர்கள், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தேசிய சுகாதார இயக்க குழும இயக்குனர் ஆகியோருடன் சென்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது குமரி மாவட்ட காசநோய் துணை இயக்குனர் வி.பி.துரை முதல்- அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


Next Story