திருச்சி விமான நிலையத்தில் கனமழை பெய்ததால் சிங்கப்பூர் விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைப்பு


திருச்சி விமான நிலையத்தில் கனமழை பெய்ததால் சிங்கப்பூர் விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைப்பு
x

திருச்சி விமான நிலையத்தில் கனமழை பெய்ததால் சிங்கப்பூர் விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி

செம்பட்டு,செப்.5-

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. மாலை 6.30 மணி அளவில் திருச்சியை நெருங்கிய போது, திருச்சி விமான நிலையத்தில் கனமழை பெய்தது. இதனால் அந்த விமானம் திருச்சியில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 150 பயணிகளுடன் அந்த விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மழை குறைந்த பிறகு மீண்டும் சென்னையில் இருந்து மீண்டும் திருச்சி வரும் என விமான நிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக விமான பயணிகள் 150 பேரும் கடும் அவதி அடைந்தனர்.


Next Story