அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மீண்டும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்


அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம்:  ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மீண்டும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
x

போடியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மீண்டும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது

தேனி

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க வருமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போடி, அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி உள்பட பல இடங்களில் நேற்று இரவில் பொதுக்குழு உறுப்பினர் அரண்மனை சுப்பு என்பவரின் பெயரில் பிரமாண்டமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. "இரட்டை இலை காப்பவரே... 1½ கோடி தொண்டர்கள் உங்களோடு" என்ற வாசகத்தோடு அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. வருகிற 23-ந்தேதி சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் போடி சட்டமன்ற தொகுதியில் அவருக்கு ஆதரவாக பொதுக்குழு உறுப்பினரின் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story