சார் பதிவாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் சார் பதிவாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு சார் பதிவாளர்கள் சங்கம், ராணிப்பேட்டை பதிவு மாவட்டம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ராணிப்பேட்டை சார் பதிவாளர் பாபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏழை, எளிய மக்கள நலனையொட்டி மனைகளாக பதிவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும், தமிழக அரசின் இரு மொழி கொள்கைக்கு எதிரான மூன்றாவது மொழி தேர்வினை ரத்து செய்ய வேண்டும், அரசாணை 80-ன் படி பணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணியில் அமர்த்திட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்பன உட்பட 10 கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிடப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.