திருப்பதி கங்கையம்மன் கோவிலில் சிரசு ஊர்வலம்
திருப்பதி கங்கையம்மன் கோவிலில் சிரசு ஊர்வலம் நடந்தது.
திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள திருப்பதி கங்கையம்மன் கோவிலில் 90-வது ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கங்கை அம்மன், சக்தி மாரியம்மன், பொன்னியம்மன், மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருப்பதி கங்கையம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சக்தி மாரியம்மன், கங்கை அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று, பின்னர் பூங்கரகம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. முக்கிய நிகழ்ச்சியாக பம்பை, தாரை தப்பட்டை, நாதஸ்வர கச்சேரயுடன் வீர விளையாட்டு்களுடன் பெரிய குளத்தில் இருந்து திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதி வழியாகச் சென்றது. அப்போது அம்மனுக்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வழிபட்டனர். பெண்கள் பலர் சாமி வந்து ஆடினர்.
தொடர்ந்து கங்கையம்மன் திருக்கல்யாணமும், இரவு வாண வேடிக்கையும் நடைபெற்றது. பின்னர் மேளதாளத்துடன் திருப்பதி கங்கையம்மன் சிரசு புறப்பட்டு பெரியகுளம் சென்றடைந்தது. தொடர்ந்து அம்மன் கழுத்தில் சிரசு அமர்த்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.