சிறுகுளம், கடம்பன்குளம் கண்மாய்கள் ஏலம்


சிறுகுளம், கடம்பன்குளம் கண்மாய்கள் ஏலம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:45 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே சிறுகுளம், கடம்பன்குளம் கண்மாய்கள் ஏலம் நடந்தது.

தேனி

பெரியகுளம் தாலுகாவை சேர்ந்த சிறுகுளம் மற்றும் கடம்பன்குளம் கண்மாய்களில் மீன் பிடி குத்தகை ஏலம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது

. இதற்கு மீன்வளத்துறை துணை இயக்குனர் பஞ்சராஜா தலைமை தாங்கினார். சிறுகுளத்திற்கு ரூ.31 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கண்மாயை ஏலம் எடுக்க 84 பேர் போட்டியிட்டனர். முடிவில் அந்த கண்மாய் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம் ேபானது. இதேபோல், கடம்பன்குளம் கண்மாயை ரூ 45 ஆயிரத்து 500-க்கு ஏலம் போனது. ஏலத்தின் போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story