சிறுநாடார்குடியிருப்பு பள்ளி மாணவிகள் சாதனை
சிறுநாடார்குடியிருப்பு பள்ளி மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி
உடன்குடி:
சிறுநாடார்குடியிருப்பு ரா.ம.வீ.நடுநிலைப் பள்ளி மாணவிகள் கோகிலா, லோக பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 2021- 22-ம் கல்வி ஆண்டு தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இந்த மாணவிகளை பள்ளி செயலர் கணேசன் பரிசு வழங்கினார். தொடர்ந்து 9 ஆண்டுகளாக தேசிய திறனாய்வு தேர்வில் மாணவர்களை வெற்றி பெறச் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் பர்வதா தேவி, ஆசிரியர்கள் கிருஷ்ணகுமாரி, வசந்தா, ஜெயசுதா மற்றும் பொன்ராஜ் ஆகியோரை பள்ளி செயலர், பள்ளிக் குழு தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story