ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்


ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:30 AM IST (Updated: 1 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று சி.ஐ.டி.யூ. - ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்காததை கண்டித்தும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பயன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், சங்க மாவட்ட தலைவர் முரளி, ஒன்றிய தலைவர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், நமச்சிவாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story