தூத்துக்குடி பேரூரணி சிறைச்சாலை முன்பு அமர்ந்து கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட கைதி மனைவி


தூத்துக்குடி பேரூரணி சிறைச்சாலை முன்பு அமர்ந்து  கைக்குழந்தையுடன் போராட்டத்தில்   ஈடுபட்ட கைதி மனைவி
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பேரூரணி சிறைச்சாலை முன்பு அமர்ந்து கைக்குழந்தையுடன் கைதியின் மனைவி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி

கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவரை வேறு சிறைக்கு மாற்றக்கோரி தூத்துக்குடி பேரூரணி சிறைச்சாலை முன்பு கைக்குழந்தையுடன் கைதி மனைவி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

கொலை வழக்கு

தூத்துக்குடியை சேர்ந்தவர் செல்வமுருகன் (எ) செல்வம். மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கல்பனா. செல்வமுருகன் (எ) செல்வம் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது.

இந்த நிலையில் பழைய வழக்கு ஒன்று தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செல்வமுருகன் (எ) செல்வத்தை கைது செய்த போலீசார் அவரை தூத்துக்குடி மாவட்ட பேரூரணி சிறையில் அடைத்து உள்ளனர். அங்கு செல்வ முருகனை சந்திக்க சென்ற அவரது மனைவியிடம் தனது உயிருக்கு சிறையில் ஆபத்து இருப்பதால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

மனைவி ேபாராட்டம்

இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கல்பனா தனது கணவர் செல்வமுருகனை வேறு சிறைக்கு மாற்ற கோரியுள்ளார். ஆனால் இது குறித்து விசாரித்த சிறை அதிகாரிகள் அங்கு செல்வமுருகனுக்கு ஆபத்து ஏதும் இல்லை என உறுதியாக தெரிவித்து அவரை அங்கேயே அடைத்துவைத்து உள்ளனர்.

எனவே செல்வ முருகனின் மனைவி கல்பனா அவரது கை குழந்தையுடன் பேரூரணி மாவட்ட சிறைச்சலை முன்பு அமர்ந்து தனது கணவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசார் சமாதானம்

தகவலறிந்த தட்டப்பாறை போலீசார் அங்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அந்த பெண் போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Next Story