சிவகளை குளத்தில் மூழ்கி பலியான இளம்பெண் குடும்பத்திற்கு எஸ்.பி.சண்முகநாதன் நிதியுதவி
சிவகளை குளத்தில் மூழ்கி பலியான இளம்பெண் குடும்பத்திற்கு எஸ்.பி.சண்முகநாதன் நிதியுதவி அளித்தார்.
தூத்துக்குடி
ஏரல்:
ஏரல் அருகே உள்ள சிவகளை நயினார்புரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை வடிவு என்ற தேவராஜ் (வயது 56). கடந்த 6-ந் தேதி இவரது மகள் சுடலைக்கனியும், ஆறுமுகநேரியை சேர்ந்த சிறுமி கோகிலாவும் குளத்தில் மூழ்கி பலியாகினர். இந்த நிலையில் நேற்று முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் சிவகளை நயினார்புரம் தேவராஜ் வீட்டுக்கு சென்று சுடலைக்கனி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் சுடலைகனி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பாற்கடல். ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story