சிவசுப்பிரமணியபுரம் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா


சிவசுப்பிரமணியபுரம்   தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவசுப்பிரமணியபுரம் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே சிவசுப்பிரமணியபுரம் யூனியன் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு சாத்தான்குளம வட்டாரக் கல்வி அலுவலர் ரோஸ்லீன் ராஜம்மாள் தலைமை தாங்கினார். யூனியன் குழு துணைத் தலைவர் அப்பாத்துரை முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியை பட்டுக்கனி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலர் அருள்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ்லின் விண்ணரசி ஆகியோர் பேசினர்.

இதில் கல்வி மற்றும் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ஊர்த் தலைவர் ஹாஜி சுல்தான், யூனியன்குழு துணைத்தலைவர் ஆகியோர் வழங்கினர். பழைய மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதில் அரசூர் புதுக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சுதந்திர பெல்சிராணி, பூச்சிக்காடு தலைமை ஆசிரியை லட்சுமிபாய், உள்ளிட்ட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியை பமீலா நன்றி கூறினார்.


Next Story