பஞ்சாயத்து தலைவர் உள்பட 6 பேர் கைது
தொழிலாளி கொலை வழக்கில் பஞ்சாயத்து தலைவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
தொழிலாளி கொலை வழக்கில் பஞ்சாயத்து தலைவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி கொலை
சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்தவர் அரவிந்தன் என்கிற பார்த்தீபன் (வயது 27). சுமை தூக்கும் தொழிலாளி. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி எம்.புதுப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது காட்டு பகுதியில் மறைந்து இருந்த கும்பல் ஒன்று அரவிந்தனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.
இதில் அரவிந்தன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த எம்.புதுப்பட்டி போலீசார் சிவகாசி முத்துராமலிங்க நகரை சேர்ந்த அருண் பாண்டியன் (31), பார்த்தீபன் (32), முத்துக்கிருஷ்ணன் உள்பட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
6 பேர் கைது
இந்தநிலையில் அரவிந்தன் கொலை வழக்கில் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து தலைவரும், சிவகாசி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான லட்சுமிநாராயணன், தி.மு.க. பிரமுகர்கள் பிரவீன், அந்தோணிராஜ், பொன் ராஜ், சவுந்தர், ஜோதிலிங்கம் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் சிவகாசி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.