அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வருகிற 27, 28-ந் தேதிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வருகிற 27, 28-ந் தேதிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:-

மேம்பாட்டு பயிற்சி

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு வல்லுநர்கள் உதவியுடன் பணி திறன் மேம்பாடு தலைமை திறன் மேலாண்மை ஆகிய கருத்துக்களில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அறிவுறுத்தல்

அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் மதுரையில் நேரடி முறையில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து பயிற்சியில் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story