திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா பள்ளியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். முதல்வர் ராணி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் சென்னை ஆத்திச்சூடி திறன் மேம்பாட்டு பயிற்சி மைய தலைவர் ஆனந்தவல்லி கலந்து கொண்டு ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு வகுப்புகள், ஆங்கில கல்வி, இலக்கணம், தமிழ் கல்வி. தமிழ் இலக்கணம் மற்றும் கணிதத்துறை குறித்து வகுப்புகள் எவ்வாறு எடுக்க வேண்டும். என்பது குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினார். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story