500 ஆடுகளை வெட்டி சிறப்பு பூஜை
முத்துப்பேட்டை அருகே நல்லமாணிக்கர் சுவாமி கோவிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விழா நடந்தது. இதில் 500 ஆடுகள் வெட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
தில்லைவிளாகம்:
முத்துப்பேட்டை அருகே நல்லமாணிக்கர் சுவாமி கோவிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விழா நடந்தது. இதில் 500 ஆடுகள் வெட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
நல்லமாணிக்கர் சுவாமி கோவில்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூரில் கற்பகநாதர் குளம் பகுதியில் நல்லமாணிக்கர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விழா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிடா வெட்டு விழா நேற்று நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய் வெட்டி படையல் போடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
கோவில் திருவிழாவில் பரம்பரை அறங்காவலர்கள் மாதவன், பரமேஸ்வரன், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆடலரசன் உள்பட முத்துப்பேட்டை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.
இதற்கு முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.