வத்தலக்குண்டு அருகே வழுக்கு மரம் ஏறும் போட்டி


வத்தலக்குண்டு அருகே வழுக்கு மரம் ஏறும் போட்டி
x

வத்தலக்குண்டு அருகே வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதையொட்டி ஊரின் மையத்தின் உள்ள மைதானத்தில் 30 அடி உயரம் கொண்ட வழுக்கு மரம் ஊன்றப்பட்டது. மேலும் மரத்தின் உச்சியில் பரிசாக ரூ.10 ஆயிரம் பண முடிச்சு வைக்கப்பட்டது.

இதையடுத்து போட்டி தொடங்கியது. இதில், ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு போட்டிப்போட்டு வழுக்கு மரத்தில் ஏறினர். இறுதியில் விராலிப்பட்டியை சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் 6 அடுக்கு அமைத்து பணமுடிச்சியை பறித்து வெற்றிபெற்றனர். அதன்பிறகு உறியடி போட்டியும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் ஆகியோர் பரிசு வழங்கினர்.


Next Story